வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 30 மே 2020 (09:34 IST)

பொன்மகள் வந்தாள் படத்தை விமர்சித்து வாங்கிக்கட்டிய வனிதா!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சொத்து பிரச்னையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன வனிதாவிற்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது தான் அவரது genuine ஆன கேரக்டர் பலருக்கும் தெரியவந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அதையடுத்து நிகழ்ச்சியின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா அறிவிக்கப்பட்டார். அராஜக குரால் சண்டை இழுத்து கெட்ட பெயர் வாங்கிய வனிதா கொஞ்சம் கொஞ்சமாக நல்லவராக தென்பட துவங்கினார்.

ஆனால், தற்போது மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்பது போல் மாறி வருகிறார். ஆம் , தற்போது விமர்சகராக புதிய அவதாரமெடுத்துள்ள வனிதா பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தை மோசமாக விமர்சித்து ரசிகர்ளின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். "நல்லவரா மாறுவதற்கு கடவுள் உங்களுக்கு செகண்ட் சான்ஸ் கொடுத்தாரு... அத காப்பாத்திக்கிட்டு அப்டியே ஓடி போயிடு செமயா இருக்கு படம் ... போய் உன்னுடைய சேனல்'ல குக் பண்ற வேலை ஏதா இருந்தா பாரு போ" என திட்டி தீர்த்து வருகின்றனர்.