1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (16:52 IST)

பாம்பை விட கொடியது தடுப்பூசி - அறம் இயக்குனர் கருத்தால் சர்ச்சை

தடுப்பூசி பற்றி அறம் பட இயக்குனர் கோபி நயினார் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 

 
நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பலத்தை வரவேற்பை பெற்ற படம் அறம். சிறந்த சமூகப்பிரச்சனையை கதைக்களமாக கொண்ட இப்படத்தை இயக்கிய கோபி நயினாரை சினிமாத்துறையினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோபி நயினார்  ‘பாம்பை விட கொடியது தடுப்பூசி. அதனால், குழந்தைகளுக்கு எந்த நன்மையும் இல்லை’ எனப் பேசினார். இந்த கருத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலர், அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
சமூக வலைத்தளங்களில் கோபி நயினாரின் கருத்து விவாதப்பொருளாக மாறியுள்ளது.