1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 ஜூன் 2022 (08:25 IST)

Result Day: +2 & 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை காண..!!

இன்று காலை 9.30 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், மதியம் 12 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது. 

 
இந்நிலையில் தேர்வு முடிவுகளை கீழ்க்கண்ட இணையதளங்களில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
 
http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/
 
இது குறித்து அரசு தேர்வு துறை இயக்ககம் தெரிவித்துள்ளதாவது, காலை 9.30 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடமே அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
 
மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த தொலைபேசி எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய தொலைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக பொதுத்தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். 
 
இதனோடு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த தற்காலிக சான்றிதழைக் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும்  90 நாட்களுக்கு இந்த சான்றிதழ் செல்லுபடி ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.