வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (22:05 IST)

மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி

Cycle
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொரணி  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொரணி  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் கிருஷ்ணராயபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி விட்டு செல்லும்போது பொரணி பகுதியைச் சேர்ந்த பெண்கள், மூதாட்டிகள் கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை எனக் கூறி சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.