புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (15:25 IST)

பட்டப்பகலில் பாய்ஃபிரெண்டுடன் சேர்ந்து ஜூலி செய்த வேலை!!! தப்பை மறைக்க என்ன செய்தார் தெரியுமா?

பாய்ஃபிரெண்டுடன் சேர்ந்து கொண்டு ஜூலி ஒரு போலீஸ்காரரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று வீர முழக்கமிட்ட ஜூலியை வீர தமிழச்சி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஜூலி  அத்தனை பெயரரையும் கெடுத்துக்கொண்டார்.  பிக்பாஸில் இருந்து வெளியே வந்த இவர் சில படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் ஜூலி தனது பாய்ஃபிரெண்ட் நடிகர் ரஜிதிப்ரானுடன் வெளியே சென்றுள்ளார்.  சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கில் காரை ரிவர்ஸ் எடுக்கும் போது ஒரு காவலரின் வாகனத்தை இடித்துவிட்டனர். அந்த காவலர் மஃப்டியில் இருந்துள்ளார்.
 
அப்போது அவர்களுக்குள் பிரச்சனை வெடித்துள்ளது. அந்த நபர் தான் காவலர் என சொல்லியும் ஜூலியும் அவரது ஆண் நண்பர் மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து அந்த காவலரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
இதுசம்மந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஜூலி பணம் கொடுத்து இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.