வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 பிப்ரவரி 2019 (10:05 IST)

கூரியர் பாயுடன் உல்லாசம்: தட்டிக்கேட்ட கணவர்; கடைசியில் நடந்த விபரீதம்

சென்னையில் கள்ளக்காதல் மோகத்தால் வாலிபர் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி.நகரை சேர்ந்தவர் மதன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகாதேவி. ரேணிகாதேவி அவ்வப்போது ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
 
அவரின் ஆர்டர்களை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹரி(29) என்பவர் கொண்டு வந்து கொடுத்து வந்துள்ளார். அப்போது ஹரிக்கும் ரேணிகாதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ரேணிகாதேவி தனது கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
 
இதனையறிந்த மதன், மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் தன் கள்ளக்காதலை விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மதன், தனது நண்பர்களின் உதவியுடன் ஹரியை கொலை செய்ய திட்டமிட்டு, ஹரியை கடத்தி சென்று செங்கல்பட்டு பழவேளி பகுதியில் அவரை சரமாரியாக வெட்டினர். உயிருக்கு பயந்து அவர் ஓடினார். விடாமல் அவரை அந்த கும்பல் துரத்தியது.
 
இதற்கிடையே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பட்டாளம் போலீசார், ஹரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் போலீஸார் தப்பியோடிய மதனையும் அவரது கூட்டாளிளையும் தேடி வருகின்றனர்.