1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜனவரி 2024 (12:20 IST)

அமித்ஷா - டிஆர் பாலு சந்திப்பில் நடந்த பெரிய தவறு: குமுறும் திமுகவினர்..!

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சரை டி ஆர் பாலு தலைமையிலான  தமிழக எம்பிக்கள் குழு சந்தித்தது. இந்த சந்திப்பின்போது பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து தற்போது திமுகவினர் குமுறி வருகின்றனர்  தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் குழுவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காங்கிரஸ் கட்சியின் ஜெயக்குமார் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றிருந்தனர். ஆனால் இவர்களில் ஒருவர் கூட வெள்ளத்தால் பாதிப்படைந்த தொகுதியின் எம்பிக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னை தொகுதி எம்பிகளான கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் தூத்துக்குடி எம்பி கனிமொழி போன்றவர்கள் இந்த  குழுவில் இருந்திருக்க வேண்டும் என்றும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட நேரத்தில் இவர்கள்தான் களத்தில் நின்று நிவாரண பணியை செய்தார்கள் என்றும் ஆனால் இவர்களை தவிர்த்து விட்டு சம்பந்தமே இல்லாத தொகுதியின் எம்பிக்கள்  எம்பிக்களை டி ஆர் பாலு அழைத்து சென்றிருக்கிறார்கள் என்றும் திமுகவினர் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.
 
இந்த சந்திப்பு முற்றிலும் சொதப்பிவிட்டதாகவும் அதற்கு முழு காரணம் டி ஆர் பாலுதான் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva