புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஜனவரி 2021 (07:42 IST)

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

தனியார் பால் நிறுவனம் ஒன்று திடீரென லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பால் முகவர்கள் சங்கம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கொரோனா நேரத்தில் பால் விற்பனை குறைவாக இருந்ததை காரணம் காட்டி பால் கொள்முதல் விலையை ரூபாய் 15 முதல் 20 வரை பன்னாட்டு நிறுவனங்கள் குறைத்தன. இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் நிலைமை சரியானதும் மீண்டும் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று கூறப்பட்டது
 
ஆனால் தற்போது இயல்புநிலை திரும்பிய போதிலும் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் திடீரென பன்னாட்டு பால் நிறுவனம் ஒன்று லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதனை அடுத்து மற்ற தனியார் நிறுவனங்களும் பாலின் விலையை உயர்த்த வாய்ப்பு இருப்பதால் இதுகுறித்து உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது
 
மக்கள் நலன் மீதும் பால் உற்பத்தியாளர் நலன் மீதும் கொஞ்சம் கூட அக்கறை இன்றி செயல்படும் தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் தமிழக அரசு இனியாவது தனியார் பால் நிறுவனங்களை வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பால் விற்பனை விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பால் முகவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது