1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 20 ஜூலை 2020 (16:25 IST)

தாம்பரத்தில் பேருந்துகளை கொளுத்திய போதை ஆசாமிகள்..

சென்னையை அடுத்த தாம்பரத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 3 பேருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளது. 
 
சென்னை தாம்பரம் அடுத்த புலிகொரடூர் பகுதியில் உள்ள காலி மனையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 10 பேருந்துகள் நிறுத்திவைக்கபட்டிருந்த போது திடிரென ஒரு பேருந்தில் தீ பற்றியது. 
 
இதனால் மலமலவென பக்கத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேருந்தில் பரவி எரியத்தொடங்கியதை கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீர் ஊற்றி அனைக்க முயற்ச்சி செய்தும் தொடர்ந்து தீ எரியத்தொடங்கியதால் தாம்பரம் தீயணைப்புப்துறையினரருக்கு தகவல் அளித்தனர். 
 
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு படையினர் வெகு நேரம் போராடி தீயை அனைத்தனர். ஆனால் முற்றிலுமாக பேருந்து எரிந்து நாசமானது . மேலும் தீ உடனடியாக அனைக்கபட்டதால் 7  பேருந்துகள் தப்பின. 
 
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலைவியது. மேலும் அப்பகுதியில் கஞ்சா அதிகாமாக பயன்படுத்துவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று பொது மக்கள் புகார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தாம்பரம் போலிசார் தீபற்றியதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.