வியாழன், 12 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2024 (10:30 IST)

UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிறைவாசிகள்! குடும்பத்தாரின் குறை கேட்பு நிகழ்வு!

News

NIA வால் UAPA சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் குடும்பத்தாரின் குறை கேட்டு வழிகாட்டும் மக்கள் தீர்ப்பாயம் வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு நிர்வாகம் சார்பாக நேற்று (09/12/24) கோவையில் நடைபெற்றது. 

 

 

நிகழ்வை வெல்ஃபேர் கட்சி மாநிலத் தலைவர் கே எஸ் அப்துல் ரஹ்மான் துவங்கி வைத்து உரையாற்றினார். தீர்ப்பாயத்திற்கு தோழர் தியாகு தலைமை தாங்கினார். பி யு சி எல் அகில இந்திய செயலாளர் Adv பாலமுருகன், வெல்ஃபேர் கட்சி மாநில பொதுச் செயலாளர் Adv I M சாதிக், துணைத் தலைவர்கள் கவி மணிமாறன், முகம்மது கௌஸ், துணைப் பொதுச் செயலாளர் முகம்மது இஸ்மாயில், நிர்வாக குழு உறுப்பினர் மதி அம்பேத்கர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருந்து விசாரணை மேற்கொண்டனர். 

 

சிறைவாசி குடும்பத்தாரின் குறைபாடுகளும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் மனதை கலங்க வைப்பதாக இருந்தது. அவர்களது அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவைகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு தமிழ்நாடு அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் மனித உரிமை அமைப்புகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளனர்.