1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Prime Minister Modi coming to Chennai.. Edappadiyar's AIADMK meeting postponed! - what is the reason

சென்னை வரும் பிரதமர் மோடி.. எடப்பாடியாரின் அதிமுக கூட்டம் ஒத்திவைப்பு! – என்ன காரணம்?

Edappadi Modi
நாளை கேலோ இந்தியா போட்டிகளை துவங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள இருந்த அதிமுக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த அதிமுக ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 19 மற்றும் 21ம் தேதிகளில் இந்த பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அவ்வாறாக சென்னை ஆர்.கே.நகர் பகுதியில் நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்ற இருந்தார்.


இந்நிலையில் நாளை சென்னையில் தொடங்கும் கேலோ இந்தியா 2024 போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருவதால், அதிமுகவின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் வருகையையொட்டி சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படுவதால் எடப்பாடியார் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் உள்ளது.

இதனால் சென்னையில் அதிமுக பொதுக்கூட்டம் ஜனவரி 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டப்படி பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K