வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 17 ஜனவரி 2024 (18:00 IST)

நாளை எடப்பாடி பழனிசாமி பிரதமராக கூட ஆகலாம்.. அதிமுக எம்பி தம்பிதுரை..!

எடப்பாடி பழனிச்சாமி ஆளுமை மிக்க தலைவர் என்பதால் நாளை அவர் பிரதமராக கூட ஆகலாம் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார். 
 
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் என்ற பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’தமிழ் மொழி கலாச்சாரத்தில், கால அடிப்படையில் பழமையான மொழி. தமிழ் மொழியை நாம் கொண்டாடுவது உதட்டளவில் இருக்கக் கூடாது. அறிஞர் அண்ணா கூறியது போல் இந்திய அரசியலமைப்பில் உள்ள அட்டவணையில் தமிழ் மொழியை மாற்றி ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கினால் தான் தமிழ் மொழி வளரும்.  

 
பிரதமர் யார் என்ற கருத்தை கொள்ளாமல் எங்கள் கருத்துக்களை நிறைவேற்றும் வகையில் தான் போட்டியிடுவோம் பாஜகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்தாலும் 2009, 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து தான் போட்டியிட்டோம். 
 
குறிப்பாக 2009 தேர்தலில் 12 இடங்களிலும் 2014 தேர்தலில் 37 இடங்களையும் நாங்கள் கைப்பற்றினோம்.  2014 ஆம் ஆண்டு பிறகுதான் மோடி ஆளுமை மிக்க தலைவர் ஆனார்.   குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமர் ஆனது போல் தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி கூட நாளை பிரதமர் ஆகலாம். யாருக்கு தெரியும்? அவர் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராக உள்ளார் என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran