திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 8 ஜூன் 2021 (15:19 IST)

அநியாய கொள்ளை: கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை நிர்ணயம்!

இந்த கொரோனா காலத்தில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களான கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை கடைக்காரர்கள் இது தான் சமயம் என்று தங்களது இஷ்டத்துக்கும் விலைகளை நிர்ணயித்து வருமானம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதாக மக்கள் புகார் தெரிவித்து இதற்காக அரசு  நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  மக்களின் கோரிக்கையில் கவனம் செலுத்திய தமிழக அரசு தற்போது கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்ட 15 மருத்துவ பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. 
 
பொருட்களும் நிர்ணயிக்கப்பட்ட அதன் விலைகளும், 
 
1. கிருமிநாசினி 200 மில்லி லிட்டர் ரூ.110
2. N95 முககவசம் ரூ.22
3. கையுறை ரூ.15
4. பிபி இ கிட் ரூ.273க்கும் விற்கலாம் .
5. இரண்டு அடுக்கு முககவசம் விலை ரூ.3, இரண்டு அடுக்கு முககவசத்தின் அதிகபட்ச விலை ரூ.4 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6. ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12
7. அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 
8. கொரொனா கவச உடை ரூ.273  என மொத்தம் 15 மருத்துவ பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.