திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (10:20 IST)

பேனா சிலை விவகாரம்; அது கருத்துகேட்பு கூட்டமே இல்ல! – பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு!

Kalaingar Pen Statue
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவுக்கு சிலை வைக்கும் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா நினைவிடத்தின் அருகே கடல் பகுதியில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்து வருகின்றது.

இந்நிலையில் பேனா நினைவுச் சின்னத்திற்கு தடை விதிக்கக் கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தொடுத்துள்ளார். அதன் மீதான விசாரணையை தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. அப்போது பேனா நினைவுச்சின்னம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தியதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, பத்திரிக்கைகளில் படித்தது உண்மை என்றால் அது கருத்துகேட்பு கூட்டமே இல்லை என்றும், எல்லா தரப்பினரையும் அழைத்து கருத்து கேட்கப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K