திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (07:34 IST)

விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். தொண்டர்கள் பயப்பட வேண்டாம்.. பிரேமலதா வீடியோ..

கோப்புப் படம்
விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை என்று நேற்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட நிலையில் விஜயகாந்த் உடல் நலத்துடன் இருக்கிறார் என்றும் தொண்டர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

அந்த வீடியோவில்  ’தேமுதிக சொந்தங்களுக்கும் கேப்டன் மீது அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் நல்ல உள்ளங்கள். பத்திரிகையாளர்கள் மற்றும் அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்

மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த அறிக்கை வழக்கமான மருத்துவமனை அறிக்கை தானே தவிர பதட்டப்பட அளவுக்கு எதுவும் இல்லை. எனவே தொண்டர்கள் பயப்பட வேண்டாம்

கேப்டன் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.  மருத்துவர் நிர்வாகம் அவரை நன்றாக கவனித்துக் கொள்கின்றனர், நானும் நன்றாக கவனித்துக் கொண்டிருக்கின்றேன்

தலைவர் அவர்கள் பூரண உடல் நலம் பெற்று வீடு திரும்புவார்,  விரைவில் தொண்டர்களையும் சந்திப்பார் என்று கூறியுள்ளார்.  மேலும்  அனைவரது பிரார்த்தனை மற்றும் அவர் செய்த தர்மம் நிச்சயமாக அவரை காப்பாற்றும், எனவே தொண்டர்கள்  யாரும் பயப்பட வேண்டாம்,  நான் கூடவே இருந்து அவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Edited by Siva