வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 30 நவம்பர் 2023 (07:13 IST)

தென்னாப்பிரிக்கா டி 20 தொடர்… மீண்டும் கேப்டன் ஆகிறாரா ரோஹித் ஷர்மா!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது. இதனால் இந்திய அணியின் வீரர்கள் மன உளைச்சலில் உள்ளதாக சொல்லப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 தொடரில் பெரும்பாலான வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டிசம்பர் 10 முதல் 21 வரை நடக்க உள்ள ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டி 20 தொடரில் கடந்த ஒரு ஆண்டு காலமாக டி 20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகியுள்ளதால், டி 20 அணிக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்காக பிசிசிஐ தரப்பு ரோஹித் ஷர்மாவை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ரோஹித் ஷர்மா டி 20 போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.