வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (15:10 IST)

கர்ப்பிணி பெண் மற்றும் 2 குழந்தைகள் பலி விவகாரம்: கர்நாடக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!

கர்நாடக மாநிலத்தில் ஆதார் அட்டை இல்லாததால், கர்ப்பிணிப் பெண்ணை அரசு மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதில், அவருக்குப் பிறந்த 2 குழந்தைகளும் பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கர்நாடக மாநிலமத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான  பாஜக ஆட்சி நடக்கிறது. இங்குள்ள,  தும்குரு மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு இன்று தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் ஒருவர் சென்றுள்ளார்.

அப்போது, அவரிடம் ஆதார் கார்டு இருக்கிறதா என்று விசாரித்த ஊழியர்கள் அவரிடம் ஆதார் இல்லாததால் அவருக்கு பிரசவம் பார்க்காமல்  திருப்பி அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற பணம் இல்லாததால், வீட்டிற்கு வந்துள்ளார் அந்த கர்ப்பிணி பெண், அவருக்கு வீட்டில் பிரசவம் ஆனதில், 2 குழந்தைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில்,தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. 
 
மூன்று உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது  தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, தகுந்த தண்டனை வழங்கிட கர்நாடக அரசு வழிவகை செய்ய வேண்டும்
 
Edited by Sinoj