1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2024 (16:10 IST)

ஓய்வறையில் படுத்திருந்த பெண்ணுக்கு திடீர் பிரசவம்.. குழந்தை கீழே விழுந்து உயிரிழப்பு..!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஓய்வறையில் படுத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென பிரசவம் ஆகி, பச்சிளம் குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணியான பிரவீனா என்ற 37 வயது பெண், ஓய்வறையில் படுத்திருந்து எழுந்த போது திடீரென வயிற்றில் உள்ள தண்ணீர் குடம் உடைந்து ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
 
அப்போது குழந்தை கீழே விழுந்து காயம் அடைந்துள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸை வரவழைத்து, தாய், சேய் என இருவரையும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உதவி செய்தனர். 
 
இந்த நிலையில், கீழே விழுந்த குழந்தை படுகாயம் அடைந்திருந்த நிலையில் அந்த குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிர் இழந்ததாக மருத்துவர்கள் கூறியதை கேட்டு தாய் கதறி அழுத காட்சியை கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது.
 
இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஓய்வறையில் படுத்து இருந்த பெண்ணுக்கு திடீரென பிரசவமாகி அந்த குழந்தை கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran