புயல் பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற கர்ப்பிணி தாக்குதல்: அதிர்ச்சி தகவல்
கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணியில் கணக்கெடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் பேராவூரணி அருகே கணக்கெடுக்க வந்த கர்ப்பிணி பெண் ஒருவர் தாக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பேராவூரணி அருகே காலகம் என்ற கிராமத்திற்கு புயல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க கிராம நிர்வாக அலுவலர்கள் பிருந்தா, செந்தில்குமார், கிராம உதவியாளர் விஜயா ஆகியோர் சென்றனர். இவர்களில் பிருந்தா கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருசில நாட்களாக தாக்கப்பட்டு வரும் நிலையில் இந்த மூன்று அதிகாரிகளையும் அக்கிராம மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிருந்தா உள்பட மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை தாக்கினால் எப்படி நிவாரணம் கிடைக்கும் என்பது கூட புரியாமல் கிராம மக்கள் தாக்கி வருவதாகவும், ஒருசிலர் தூண்டிவிடுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.