சென்னையில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (17:07 IST)

கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. முதலில் பாலூட்டும் தாய்மார்களுக்கு போடப்படாமல் இருந்த நிலையில் பின்னர் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதே போல இப்போது கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.இதில் மேலும் படிக்கவும் :