காவிரி மேலாண்மை வாரியத்திற்காக களமிறங்கிய விஜய்சேதுபதி ரசிகர்கள்
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் போராட அரசியல் கட்சிகளே இல்லை என்ற அளவுக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.
அரசியல் கட்சிகள் மட்டுமின்றி திரையுலகினர்களும், திரையுலக பிரபலங்களின் ரசிகர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளதை அவ்வப்போது பார்த்து வந்தோம்.
ஏற்கனவே விஜய், அஜித், தனுஷ் ரசிகர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடிய நிலையில் தற்போது நடிகர் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் இன்று கரூரில் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசுக்கு எதிராகவும், காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடவும் அவர்கள் கோஷமிட்டதால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.