1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (11:56 IST)

செய்முறை தேர்வு இன்றுடன் முடிவு: நாளை முதல் விடுமுறையா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல்பாஸ் என்ற உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் திட்டமிட்டபடி செய்முறை தேர்வு மட்டும் நடைபெறும் என்றும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கிய செய்முறை தேர்வு இன்று மாலையுடன் முடிவடைகின்றன. இதனை அடுத்து செய்முறை தேர்வுகள் முடிவடைவதால் நாளை முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் விடுமுறையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இன்று மாலை அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பள்ளிகள் செயல்பட வாய்ப்பில்லை என்றே பலர் கருதுகின்றனர்