திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (09:04 IST)

பாலில் ஜாதிக்காய் பொடி கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

Jathikai
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய் பல்வேறு மருத்துவ நன்மைகள் கொண்டது. ஜாதிக்காயின் அற்புதமான மருத்துவ பயன்களை தெரிந்துக் கொள்வோம்.



பல்வேறு மருத்துவ குணங்களை ஜாதிக்காய் நாட்டு மருந்துகளில் முக்கியமான ஒன்று. பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கும் நாட்டு மருந்துகளில் ஜாதிக்காய் உள்ளது.

ஜாதிக்காய் மன அழுத்தத்தை குறைக்கிறது. ஜாதிக்காய் பொடியை தேனுடன் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஜாதிக்காய் அதிக தாகத்தைத் தணிப்பது மட்டுமல்லாமல் சோர்வினால் ஏற்படும் காய்ச்சலையும் குறைக்கிறது. ஜாதிக்காய் பொடியை வெதுவெதுப்பான பசும்பாலில் கலந்து மாலையில் சாப்பிட ஆண்களுக்கு பலம் கிடைக்கும்.

ஜாதிக்காய் இருமல், சளி, சளியை குறைக்கும் மருந்தாக செயல்படுகிறது.ஜாதிக்காயை அதிகமாக உட்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஜாதிக்காயைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம், கர்ப்பிணிப் பெண்கள் அதைப் பயன்படுத்தக்கூடாது.