வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 ஜனவரி 2021 (12:19 IST)

அதிமுகவை மீட்டு அம்மா வழி நல்லாட்சி? – டிடிவி தினகரன் உறுதி!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய முயற்சிகள் நடப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா தண்டனை காலம் முடிந்து இன்று அதிகாரப்பூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் முன்னதாக கொரோனா காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பிப்ரவரி முதல் வாரத்தில்தான் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டது குறித்து பேசியுள்ள டிடிவி தினகரன் ‘ஜெயலலிதாவின் நினைவிடம் இன்று திறக்கப்பட்டுள்ளது சசிக்கலாவின் விடுதலையை கொண்டாடுவது போலதான் தெரிகிறது. அதிமுகவை மீட்டு மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை வழங்க முயற்சிகள் நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.