Daily Horoscope
✕

தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்! வீட்டுக்கே சென்று வாக்கு சேகரிப்பு..!

Written By Mahendran
Updated: வியாழன், 4 ஏப்ரல் 2024 (11:40 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் தபால் வாக்குகள் பதிவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணி செய்பவர்களுக்கு தபால் வாக்குகள் இருக்கும் நிலையில் இன்று முதல் தபால் வாக்குகள் பதிவு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களின் வீட்டுக்கே சென்று தபால் வாக்கு பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டாலும் இந்த வாக்குகள் ஜூன் நான்காம் தேதி தான் எண்ணப்படும்  என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து தபால் வாக்குகள் உள்ள வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை பொறுப்புடன் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran

எல்லாம் காட்டு

ஐபிஓ வெளியிடும் முன்பே இரு மடங்கான சொத்து மதிப்பு... ஆந்த்ரோபிக் நிறுவனர்கள் மகிழ்ச்சி...

தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!.. திமுகவின் சைலண்ட் ஆப்பரேஷன்...

யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் இஸ்ரேலின் நிலைமை என்ன? அமெரிக்கா தலையிடுமா?

கோவையில் அனுமதி இல்லாமல் ரோட் ஷோ நடத்திய திரிஷா - நடந்தது என்ன?..

தெர்மாகோலை நானா போட்டேன்!.. எப்படி ஓட்டுனீங்க!. இப்ப தவெகவை பாருங்க!...

அடுத்த கட்டுரையில்
Show comments