ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (21:39 IST)

உயிருக்குப் பின் தொழில்… செய்தியாளர்களுக்கு அறிவுரை கூறிய முதல்வர்

சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று தமிழகத்தில் 1091 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று எற்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 24586 ஆக உயர்ந்துள்ளது

மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 1091 பேர்களில் சென்னையில் 809 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன்னர். இதனையடுத்து சென்னையில் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16585 ஆக உயர்ந்துள்ளது .

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 13 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது . தமிழகத்தில் இன்று 536 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மொத்தம் குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 13706 என உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தற்போது தமிழக முதல்வர் கூறியுள்ளதாவது :செய்தியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.  உயிர் தான் முக்கியம் உயிருக்குப் பின் தான் தொழில் என்பதை தெரிந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.