1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (11:39 IST)

பொறையார் பணிமனை இடிந்த விவகாரம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சமீபத்தில் பொறையார் பணிமனை கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 9 பேர் பலியாகிய விவகாரம் தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஊழியர்கள் கட்டிடத்தின் உறுதியற்ற தன்மை குறித்து புகார் அளித்தும் போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒன்பது உயிர்கள் பரிதாபமாக பலியானதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.



 
 
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், 'தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து கழக மற்றும் பணிமனை கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதோடு இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு கூடுதல் நிவாரண தொகை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் பொறையார் பணிமனை விபத்து குறித்து பதிலளிக்குமாறு போக்குவரத்து துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.