திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (13:27 IST)

அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு வாய்ப்பா? அமைப்புச் செயலாளர் பொன்னையன்

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரட்டை தலைமை இருந்துவரும் நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்த கேள்விக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் அவர்கள் பதிலளித்துள்ளார்
 
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு வாய்ப்பு இல்லை என்றும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என கட்சிக்கு கண்ணும் இமையும் போல இரண்டு பதவிகள் உருவாக்கப்பட்டது என்றும் அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் சேலத்தில் இன்று பேட்டி அளித்துள்ளார்
 
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது