திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 மார்ச் 2019 (08:41 IST)

கள்ளக்குறிச்சி தொகுதி யாருக்கு? திமுக கூட்டணியில் சலசலப்பு

திமுக கூட்டணியில் ஒருவழியாக தொகுதி பங்கீடு முடிந்து அடுத்தகட்டமாக எந்தெந்த கட்சிக்கு என்னென்ன தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை இன்றுமுதல் நடைபெறவுள்ளது. இன்று காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒன்பது தொகுதிகளின் விபரம் தெரிய வரும் என தெரிகிறது
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை பெற்ற பாரிவேந்தரின் ஐஜேக, கள்ளக்குறிச்சி தொகுதி மீது கண் வைத்துள்ளதாம். ஆனால் இந்த தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி தனது மகனை போட்டியிட வைக்க கடந்த சில மாதங்களாக களப்பணி செய்து வருகிறார். தற்போது இந்த தொகுதியை பாரிவேந்தர் கேட்பதால் அதிர்ச்சி அடைந்த பொன்முடி, இந்த தொகுதியை தலைவரிடம் கேட்டு பெற தீவிர முயற்சியில் இருக்கின்றாராம். 
 
துர்கா ஸ்டாலின், உதயநிதி உள்பட பலரிடம் இதுகுறித்து பொன்முடி தரப்பினர் பேசி வருவதாகவும், உதயநிதி எப்படியும் கள்ளக்குறிச்சி உங்களுக்குத்தான் என நம்பிக்கையான வார்த்தைகள் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பொன்முடிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி கிடைக்காமல் செய்ய திமுகவினர்களே சிலர் உள்குத்து வேலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக தலைவர் என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.