காயத்ரி ரகுராம் திமுகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?-அமைச்சர் பொன்முடி பதில்!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவிலிருந்து ஆறு மாதங்களுக்கு காயத்ரி ரகுராமை தற்காலிக நீக்கம் செய்திருந்தார்.
இந்நிலையில் இப்போது காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். இதுபற்றி அவர் “பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன் என்றும் இந்த முடிவை எடுக்க அண்ணாமலை தான் காரணம் என்றும் அவரின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திமுக அமைச்சர் பொன்முடியிடம் ஊடகத்தினர் “காயத்ரி ரகுராம் திமுகவுக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு அமைச்சர் பொன்முடி “பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும் அவர்களை திமுக ஏற்கும்” எனக் கூறியுள்ளார்.