பொங்கல் திருநாள்: தமிழகம் முழுவதும் மக்கள் பொங்கல் பொங்கி கொண்டாட்டம்!
இன்று தை முதல் நாளில் தமிழகம் முழுவதும் மக்கள் பொங்கல் திருநாளை பொங்கல் பொங்கி கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் மாதத்தின் சிறப்பு மிக்க நாளான தை மாதத்தில் முதல் நாளில் விவசாயத்தை செழித்தோங்க செய்யும் சூரியனுக்கு நன்றி கூறும் வகையில் தமிழக மக்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
அவ்வாறாக இன்று பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகளில் மக்கள் சில நாட்களுக்கு முன்னதாகவே ஈடுபட தொடங்கினர். பொங்கலை முன்னிட்டு ஒரு வாரமாகவே கடைத்தெருக்கள், அங்காடிகள் முழு கூட்டமாக இருந்தது. பலரும் பூஜைக்கு தேவையான பொருட்கள், கரும்பு, வெல்லம், மஞ்சள் செடி என வாங்கி சென்றனர்.
இன்று விடியற்காலையே வாசலில் சாணி மெழுகி கோலமிட்டு அடுப்பு வைத்து மண் பானையில் பாரம்பரிய முறைப்படி பல இடங்களில் மக்கள் பொங்கலை பொங்கி சூரியனை வழிபட்டனர். இந்த நன்னாளில் மக்கள் பொங்கலையும், அன்பையும் மற்றவர்களோடு பகிர்ந்து வருகின்றனர்.
Edit by Prasanth.K