1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (14:34 IST)

முதல்வரானதும் என்.ரங்கசாமி கையெழுத்திட 3 முக்கிய கோப்புகள் என்ன?

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் முதல்வராக பதவியேற்ற என்.ரங்கசாமி பின்னர் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். 

 
நடந்து முடிந்த புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.இதில் மெஜாரிட்டி என்.ஆர்.காங்கிரஸ் என்பதால் அக்கட்சியினர் ஒருமனதாக என்.ரங்கசாமியை முதல்வராக தேர்வு செய்தனர்.
 
இதைத்தொடர்ந்து இன்று அவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.க. கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். இதன் பின்னர் என்.ரங்கசாமி பின்னர் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். 
 
ஆம், நிலுவையில் உள்ள 2 மாதத்துக்கான இலவச ரேஷன், விண்ணப்பித்த முதியோர், விதவைகள் 10 ஆயிரம் பேருக்கு புதியதாக பென்ஷன், மேலும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சென்டாக் உதவித்தொகை வழங்கும் கோப்பில் முதல்வர் ரங்கசாமி கையெழுத்திட்டார்.