1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (20:30 IST)

சுயநலமற்ற நிறம் காவி; அதை எதிர்க்கும் கமல் சுயநலவாதி: பொன்னார் பதிலடி!

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பிசினஸ் ஸ்கூல் ஆப் நிகழ்ச்சியிலும், வருடாந்திர இந்திய மாநாட்டிலும் நடிகர் கமல்ஹாசன் தமிழரின் பாரம்பரிய வேட்டி, சட்டையில் பங்கேற்றார். 
 
இந்த நிகழ்ச்சியில், அவர் பேசிய போது ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா என கேள்வி எழுப்பட்டது. அதற்கு கமல், என்னுடைய நிறம் கறுப்பு, நடிகர் ரஜினியின் நிறம் காவியாக இருக்காது என நம்புகிறேன். அப்படி ஒருவேளை ரஜினி அரசியலின் நிறம் காவியாக இருந்தால், அவருடன் நான் கூட்டணி வைக்கமாட்டேன் என தெரிவித்தார்.
 
காவி நிறம் என கமல், பாஜக-வை குறிப்பிட்டுள்ளார். அதாவது, ரஜினி பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அவருடன் நான் கூட்டணி வைக்க மாட்டேன் என்று மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார். 
 
கமலின் இந்த கருத்து குறித்து பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பின்வருமாறு பேடியுள்ளார். காவி என்பது சுயநலம் இல்லாதவர்கள் ஏற்றுக் கொண்ட நிறம். கமல் காவிக்கு மாறமாட்டேன் என்பது சுயநலம். எப்படி இருந்தாலும் காவியை கொச்சைப் படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.