ரஜினியின் 'காலா' டீசர், ஆடியோ ரிலீஸ் எப்போது?

Last Updated: திங்கள், 12 பிப்ரவரி 2018 (21:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் மற்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. டீசர் ரிலீஸ் தேதி மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அனேகமாக மார்ச் மாத இறுதியில் இந்த இரண்டும் இருக்கும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

லைகா நிறுவனம் வெளியிடும் இந்த படத்தில் ரஜினிகாந்த், நானா படேகர்,
சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே,
அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் முரளி ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டின் மிகபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :