செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2018 (19:07 IST)

அதிமுகவை புறக்கணிக்கும் மோடி!

ஜெ. உருவப்பட திறப்பு விழாவுக்கு எடப்பாடி அரசு விடுத்த அழைப்பை மோடி புறக்கணித்துள்ளார்.

 
தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைத்தார். எடப்பாடி தலைமையில் ஓராண்டு நிறைவு தினமான 16ஆம் தேதியன்று ஜெயலலிதா உருவப்படம் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
 
இந்த விழாவிற்கு மோடிக்கு அழைப்பு சென்றுள்ளது. ஆளும் அரசு மீது ஆளுநர் ஏற்கனவே ஊழல் பட்டியலை அனுப்பி வைத்துள்ளார். இதன் காரணமாக மோடி விழாவிற்கு வர மறுத்துள்ளார். ஆளுநர், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படுவதற்கு எதிராக திமுக சார்ப்பில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீதிமன்றத்தில் தடை பெற்றுவிடுவார்களோ என்ற பயத்தில் அவசர அவசரமாக இன்று ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக அதிமுவை சேர்ந்தவர்கள் மத்திய அரசு மற்றும் பாஜகவினர் கருத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். சசிகலா சிறைக்கு சென்றபின் ஓபிஎஸ் - எடப்பாடி இணைந்து தமிழை அரசை ஆட்சி செய்ய தொடங்கிய ஆரம்ப காலத்தில் மோடி ஆதரவு இருந்த காரணத்தால் அதிமுகவினர் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது சில விஷயங்களில் அதிமுகவை சேர்ந்தவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். மோடி கொஞ்சமாக கொஞ்சமாக அதிமுகவை புறக்கணித்து வருகிறார்.