புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 மார்ச் 2019 (15:31 IST)

ரூ.40,000 விற்கப்பட்ட பெண்களின் வீடியோ: பொள்ளாச்சி வழக்கில் திடீர் திருப்பம்

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துள்ளனர்.
 
இவ்வழக்கில் வசந்தகுமார், செந்தில், சதீஷ், திருநாவுக்கரசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே சில வீடியோக்கள் வெளியான நிலையில், நேற்றும் மேலும் 4 வீடியோக்கள் வெளியாகின. 
 
நேற்று வெளியான வீடியோவில் பார் நாகராஜ் பெண்களிடம் அத்துமீறுவ்து பதிவாகி இருந்தது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பாலா என்பவனும் நேற்று கைது செய்யப்பட்டான். இந்நிலையில் இவ்வழக்கு குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 
பெண்களின் வீடியோவை ரூ.40,000 கொடுத்து ஒருவர் வாங்கி சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பெண்களிடம் அத்துமீறும் வீடியோவை முக்கிய பிரமுகர் ஒருவர் ரூ.40,000 கொடுத்து வாங்கினாராம். 
 
சுமார் 40 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை 4 நிமிடங்களாக சுருக்கி, டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வீடியோ வெளியான பின்னர்தான் இந்த வழக்கு மிகவும் சீரிஸாக கொண்டு செல்லப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.