பூ வைக்கலாம், பொட்டு வைக்கலாம் ஆனால் நோ கொலுசு: செங்கொட்டையன் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவிகள் கொலுசு அணிவதனால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது என கூறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் உள்ள பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த அனைத்து விதமான சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் இலவச மடிக்கணினி மூலம் மாணவர்களின் அறிவு மேம்படும் என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம், மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு கொலுசு அணிய தடை விதித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் பள்ளியில் மாணவிகள் கொலுசு அணிந்து செல்லும்போது மாணவர்களின் கவனம் சிதறும் வாய்ப்புள்ளதாகவும், இதனால் அவர்கள் படிப்பு கெடும் என்றும் தெரிவித்தார். ஆனால் மாணவிகள் பூ வைத்துக் கொள்வதற்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்தார்.