ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. முதலீடுகளை ஈர்க்க என தகவல்..!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சென்று முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் துபாய் சென்றார் என்பதும் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அப்போது கையெழுத்திடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. முதலீடுகளை ஈர்க்கவும் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் மே 23ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran