திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2023 (11:46 IST)

மண்டபத்தில் மது அருந்த அனுமதியே கிடையாது!? – செந்தில் பாலாஜி விளக்கம்!

Senthil Balaji
தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் அனுமதி பெற்று மது விருந்து நடத்தலாம் என்று வெளியான அறிவிப்பு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மாநில அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள், தனியார் மதுக்கடைகள் பல செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு அங்கீகாரம் பெற்ற பார்களில் மது அருந்த அனுமதி உள்ளது.

இந்நிலையில் இதுதவிர திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் அனுமதி பெற்று மது அருந்தலாம், மதுவிருந்து நடத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனுமதியை எதிர்த்து பலரும் பல விமர்சன பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மது அருந்த அளித்த அனுமதி குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். அதில் “இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அருந்த அனுமதி அளிப்பது நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் மட்டுமே மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில், உள்ளூர் நிகழ்ச்சிகளில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Edit by Prasanth,K