1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 6 மே 2019 (11:48 IST)

சரக்கடிக்க கிளாஸ் இல்ல.. திருட்டு போலீஸை காட்டி கொடுத்த சிசிடிவி

ரோந்த பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸார் தண்ணீர் பந்தலில் வைக்கப்பட்டிருக்கும் டம்பளரை திருடி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. 
 
புதுக்கோட்டை கீரமங்கலம் அருகே வெயிலின் காரணமாக தண்ணீர், மோர், சர்பத் ஆகிவயை மக்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பருக டம்பளரும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக இந்த டம்ளர்கள் இரவு நேரத்தில் காணமால் போனது.
 
யாரரோ இந்த டம்ளர்களை திருடி செல்கிறார்கள் என இளைஞர்கள் போலீஸாரிடம் புகார் அளிக்க நினைத்தனர். ஆனால், இதற்கு ஆதாரம் வேண்டும் என்பதால் அந்த பகுதியில் சிசிடிவி கேமராவை பொருத்தி, அந்த பதிவை எடுத்து பார்த்துள்ளனர். 
 
அந்த சிசிடிவி காட்சியில், ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் டம்பளரை எடுத்து செல்வது பதிவாகி இருந்தது. விசாரித்ததில் மது குடிப்பதற்காக அவர் அந்த டம்ப்ளர்களை எடுத்ததும் தெரியவந்துள்ளது. 
 
அந்த போலீஸ்காரரை குறித்து அவரது உயரதிகாரிகளிடம் வீடியோவுடன் புகார் அளிக்கவுள்ளதாக இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.