புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 2 மே 2019 (16:10 IST)

போலீஸ் யூனிஃபார்மில் டிராவல்ஸ் ஓனருடன் ஜல்சா: வீடியோவை கசியவிட்ட மர்ம ஆசாமிகள்

கோவை அருகே திருமணமான பெண் போலீஸ் ஒருவர் சீருடையில் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
கோவையில் உள்ள கருத்தம்பட்டி காவல் நிலையத்தி பணியாற்றி வரும் திருமணமான பெண் போலீஸ் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. 
 
இந்நிலையில் இவருக்கு தனியார் டிராவல்ஸ் ஓனர் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 
தற்போது இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் போலீஸ் சீருடையுடன் அந்த பெண் போலீஸ் தனது காதலருடன் மிகவும் நெருக்கமாக இருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். 
 
அப்போது அந்த பெண் போலீஸ் சீருடையில் இருந்தது உண்மைதான் ஆனால் அந்த சம்பவம் காவல் நிலையத்திற்குள் நடக்கவில்லை, அந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ளது என்றும் அதே போல் பெண் போலீஸ் டியூட்டி நேரத்தில் இவ்வாறு நடக்கவில்லை என போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. 
 
இருப்பினும், பெண் போலீஸ் சீருடையில் அத்துமீறி நடந்துக்கொண்டதற்காக அவர் மீது போலீசார் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.