வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (22:51 IST)

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது கொலை வழக்குப் பதிவு!

பாகிஸ்தான் நாட்டில், தடையை மீறி போராட்டம் நடத்தியதில் ஒரு தொண்டர் பலியானதால் இம்ரான்கான் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில், பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.  இந்த நிலையில், பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், முன்னாள் பிரதமர் இம்ரானங்கான் தலைமையியான  தெக்ரீக் இ இன்சாப் கட்சியினர் லாகூரி ஒரு பேரணிக்கு அழைப்பு விடுத்தனர்.

ஆனால், போலீஸார் இந்த பேரணிக்கு தடை விதித்தனர். இந்தத் தடையை மீறி இம்ரான் கான் தன் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் இம்ரான் கான் வீட்டிற்கு வந்தனர்.

அங்கு வந்த போலீஸார் கூட்டத்தை கலைந்துபோகும்படி கூறியும் அவகள் போகாததால், போலீஸாருக்கும்- தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். இந்த மோதலில், அலிபிலால் என்ற தொண்டர் உயிரிழந்தார்.  மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் இம்ரான் கான் உள்ளிட்ட 400 பேர் மீது கொலைவழக்கு, வன்முறை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.