திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

காதலியை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த காவலர்

விழுப்புரம் அருகே டாக்டருக்கு படித்து வரும் காதலியை துப்பாக்கியால் சுட்ட சென்னையை சேர்ந்த காவலர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே அன்னியூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. எம்பிபிஎஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் சென்னையில் போலீசாக பணிபுரியும் கார்த்திவேல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த கார்த்திவேல், காதலி சரஸ்வதியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.