1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. police send summon to youtuber madhan

யூடியூபில் ஆபாச பேச்சு: யூடியூபர் மதன் ஆஜராக காவல்துறை சம்மன்!

யுடியூப்
மதன் என்பவர் வைத்துள்ள யூடியூப் சேனலில் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக வெளி வந்துள்ள புகாரை அடுத்து நேரில் ஆஜராக காவல்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது
 
யூட்யூபில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட சிறுவர் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களுக்கு அழைப்பு விடுக்கும் மதன், அவர்களிடம் ஆபாச பேச்சுக்கள் பேசியதாக தெரிகிறது. அவருடைய சேனலில் உள்ள வீடியோக்கள் அனைத்துமே கிட்டத்தட்ட ஆபாச பேச்சுக்கள் கலந்த வீடியோக்களாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
அதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் வரும் இளம் பெண்களுடன் வீடியோ காலில் ஆபாசமாக பேசுவதும் வழக்கமாக கொண்டுள்ள என்றும் மதன் மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட பல நகரங்களில் மதன் மீது பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என மதனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்
 
இன்று அவர் நேரில் ஆஜரானால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவருடைய யூடியூப் சேனலில் உள்ள ஆபாச வீடியோக்கள் அனைத்தையும் நீக்குவதற்கு போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது? அன்பில் மகேஷ் பேட்டி!