புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 ஜூன் 2019 (09:49 IST)

ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்யும் சைக்கோ கொலையாளி: சென்னையில் பரபரப்பு

சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்யும் சைக்கோ கொலையாளி நடமாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையாளியை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
 
சென்னை கொளத்தூரை சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவர் சமீபத்தில் ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை செய்தது யார்? என்பது குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதே பாணியில் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் நாராயணன் என்ற கூலித்தொழிலாளி ஆணுறுப்பு அறுக்கப்பட்டு படுகாயத்துடன் மீட்கப்பட்டார். இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
 
ஆண்களின் ஆணுறுப்பை மட்டும் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபடும் சைக்கோ கொலையாளியை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதியில் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் இந்த சைக்கோ கொலையாளி பிடிக்கப்படுவார் என போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.