திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 ஜனவரி 2019 (08:13 IST)

கோடாரியுடன் வலம் வரும் சைக்கோ கில்லர்!!! மரண பீதியில் பொதுமக்கள்..

லண்டனில் நபர் ஒருவர் கோடாரியுடன் வலம் வந்து மக்களை அச்சுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனில் பியூர்லி என்ற பகுதியில் பிரபலமான சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இதில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.  எப்பொழுது பிசியாகவே காணப்படும் இந்த சூப்பர் மார்க்கெட்டிற்குள் திடீரென புகுந்த நபர் ஒருவர் தன் கையிலிருந்த கோடாரியால் மக்களை தாக்க முற்பட்டான்.
 
இதனால் பேரதிர்ச்சி அடைந்த மக்கள் தெறித்து ஓடினர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அந்த சைக்கோ கொலையாளி ஓடிவிட்டான். போலீஸார் கடையில் பதிவாகிய சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபரை தேடி வருகின்றனர். உடனடியாக அந்த நபரை கைது செய்யுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.