1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (18:13 IST)

ராம்குமாருக்கு எதிராக வலுவான ஆதரங்கள் உள்ளது : காவல்துறை அதிரடி

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

 
தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சுவாதியை தான்தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. 
 
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை என்றும், உண்மையான குற்றவாளியை மறைக்க போலீசார் முயல்கிறார் என்றும் வழக்கறிஞர் கிருஷணமூர்த்தி என்பவர் பரபரப்பு புகார்களை கூறினார். மேலும், ராம்குமாரின் ஜாமின் மனுவையும் அவர் தாக்கல் செய்துள்ளார். 
 
ராம்குமாரின் ஜாமீன் மனுவிற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்த தமிழக போலீசார், இந்த வழக்கில் ராம்குமாருக்கு எதிராக தங்களிடம் வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், அவர் தப்ப முடியாது என்றும் கூறியுள்ளனர்.
 
மேலும், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் அவர்கள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.