வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 8 ஜனவரி 2023 (18:04 IST)

19 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டது: கோர்ட்டில் கூறிய போலீசார்!

rats
19 கிலோ கஞ்சாவை கொஞ்சம் கொஞ்சமாக எலிகள் தின்று விட்டது என நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் தற்போது 11 கிலோ கஞ்சா மட்டுமே போலீஸார் கோர்ட்டில் ஒப்படைத்து உள்ளதாக தெரிகிறது.
 
இது குறித்து எழுத்துபூர்வமாக போலீசார் தெரிவித்தபோது பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு வைக்க முடியவில்லை,  பழுதடைந்த கட்டிடம் காரணமாக மழை காரணமாக கஞ்சா சேதமாகி விட்டது என்றும் கஞ்சா பொட்டலங்களை எலிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடித்து தின்று விட்டது என்றும் கூறியுள்ளனர்
 
போலீசாரின் இந்த பதிலால் நீதிபதி அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. மேலும் போலீசார் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியதை அடுத்து கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்களை வழக்கிலிருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கற்றுக்கொண்டேன்
 
Edited by Siva