வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (19:55 IST)

டாஸ்மாக் விற்பனை நேரம் குறைக்கப்படுகிறதா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

tasmac
தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை குறைக்கவும் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கவும் கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் மது விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
பொதுநலன் கருதி தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை உயர்நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்துள்ளது. 
 
மேலும் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக்கில் மதுபானம் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
Edited by Mahendran