திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (18:19 IST)

'ஆஸ்கர் தம்பதிகள்' பொம்மன், பெள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு!

bomman billie
ஆஸ்கர் தம்பதிகள் என்று அழைக்கப்படும்  பொம்மன்,. பெள்ளி ஆகிய இருவருக்கும் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முதுமலை யானைகள் காப்பகம் மற்றும் ஆதரவற்ற யானைகளை வளர்க்கும் தம்பதிகள் பற்றி உருவாக்கப்பட்ட தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் என்ற குறும்படத்துக்கு சிறந்த குறும்படப் பிரிவில் விருது வென்றது. இக்குறும்படத்தை இயக்குனர் கார்த்திகி கோல்சால்வ் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில்,ஆஸ்கர் தம்பதிகள் என்று அழைக்கப்படும்  பொம்மன்,. பெள்ளி ஆகிய இருவருக்கும் 24 மணி நேரன் போலீஸ்பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாரத பிரதமர் மோடி, 2 நாட்கள் பயணமாக  நாளை தமிழகம் வரவுள்ள நிலையில், இங்கு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இந்த நிலையில், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் என்ற படத்தில் நடித்த தம்பதிகளான பொம்மன், பெள்ளியைச் சந்திக்கிறார்.

இதன் காரணமாக பொம்மன், பெள்ளி ஆகிய இருவருக்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.